தமிழகத்தில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 13-ம் தேதி முதல் தொடங்கி நடந்து வருகிறது. அதேபோன்று 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மார்ச் 14-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு வருகிற ஏப்ரல் 6ம் தேதி தொடங்கி 20-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்நிலையில் 10ஆம் வகுப்புக்கான ஹால் டிக்கெட் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அதன்படி 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் இன்று முதல் பதவிறக்கம் செய்துக்கொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்து இருக்கிறது. அதாவது, https://dge.tn.gov.in எனும் இணையதளத்தில் இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககமானது அறிவிப்பு வெளியிட்டுள்ளது.