திருநெல்வேலியில் போலீசார் விசாரணையின் போது குற்றவாளிகளின் பல்லை பிடுங்கும் செய்திதான் தற்போது தமிழகம் முழுவதும் வைரலாகி கொண்டிருக்கிறது. அதாவது நெல்லை மாவட்டத்தில் உள்ள அம்பாசமுத்திரத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளராக ‌ பல்பீர் சிங் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் சிறு சிறு குற்றங்கள் செய்யும் நபர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று துடிக்க துடிக்க அவர்களின் பற்களை பிடுங்குகிறாராம். கடந்த 3 தினங்களுக்கு முன்பாக ஜமீன் சிங்கம்பட்டி பகுதியில் சூர்யா என்ற வாலிபர் சிசிடிவி கேமராவை உடைத்து பிரச்சினை செய்துள்ளார்.

இவரை ஏஎஸ்பி பல்பீர் சிங் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று அவருடைய பற்களை பிடுங்கியதாக தற்போது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கிட்டத்தட்ட பல்பீர் சிங் 40 பேரின் பற்களை பிடுங்கி உள்ளதாக கூறப்படுகிறது. அதன் பிறகு ஏஎஸ்பி-ஐ எதிர்த்து கேள்வி கேட்கும் நபர்களை மிரட்டுவதாக அம்பை காவல் ஆய்வாளர் சந்திரமோகன் மீதும் குற்றசாட்டு எழுந்துள்ளது. இதனால் இந்த விவகாரத்தில் இவருக்கும் சம்பந்தம் இருப்பதாக நேதாஜி சுபாஷ் சேனை அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. மேலும் பற்களை பிடுங்கியவர்களின் வீடியோக்கள் வலைதளத்தில் வைரலானதை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் சேரன்மகாதேவி உதவி ஆட்சியர் முகமது சபீர் ஆலம் தலைமையில் ஒரு விசாரணைக் குழுவை அமைத்து சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் மீது விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார் ‌