ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 27 வயது இளைஞர் விநாயக் பிரஜாபதி, தனது பூர்வீக சொத்தை விற்று சுமார் 10 லட்சம் ரூபாய் செலவில் வீட்டிலேயே நவீன ஹோம் ஸ்டுடியோ ஒன்றை அமைத்துள்ளார்.

இதன் மூலம் யூடியூப் சேனல் ஒன்றைத் தொடங்கி நடத்தி வந்த அவருக்கு, எதிர்பார்த்த அளவில் ஆதரவோ அல்லது பின்தொடர்பவர்களோ கிடைக்கவில்லை.

இதனால் கடந்த சில நாட்களாகக் கடும் மன உளைச்சலில் இருந்த விநாயக், கடந்த சனிக்கிழமை இரவு தனது ஸ்டுடியோவிற்குள் புகுந்து அங்கிருந்த உபகரணங்களுக்குத் தீ வைத்துள்ளார்.

வீடு முழுவதும் புகை சூழ்ந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் கூச்சலிடவே, அக்கம் பக்கத்தினர் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.

விரைந்து வந்த போலீசார் கதவை உடைத்து இளைஞரையும் அவரது குடும்பத்தினரையும் பத்திரமாக மீட்டனர்.

இந்த விபத்தில் யாருக்கும் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை என்றாலும், ஸ்டுடியோவில் இருந்த விலை உயர்ந்த கம்ப்யூட்டர்கள், கேமராக்கள் மற்றும் சவுண்ட் சிஸ்டம் என அனைத்தும் தீயில் கருகிச் சாம்பலாகின.