திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகிலுள்ள பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி, தனியார் பள்ளியில் 10-ஆம் வகுப்பு பயின்று வருகிறார். இச்சிறுமியிடம், அதே பகுதியைச் சேர்ந்த 18 வயது இளைஞர் ஒருவர் காதல் என கூறி நெருங்கி பழகியுள்ளார். பின்னர், நம்பிக்கை ஏற்படுத்தி பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, சிறுமியை அவரது பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்தனர். அப்போது, சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானது மருத்துவ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, பெற்றோர் அளித்த புகாரின் பேரில் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். மேலும் தொடர்ந்து, விசாரணை நடைபெற்று வருகிறது.
