
பாகிஸ்தானில் 10 மாத பெண் குழந்தையின் வயிற்றில் இரட்டைக் கருக்கள் இருப்பதை கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் பாகிஸ்தானின் சாதிகாபத்தில் சமீபத்தில் நடந்துள்ளது. குழந்தை வயிற்று வலியால் அவதிப்படுவதை கண்டறிந்த மருத்துவர்கள் ஒரு கட்டி மற்றும் இரண்டு இரட்டை கருவை கண்டுபிடித்தனர். அதன் பிறகு குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்து அதனை மருத்துவர்கள் அகற்றினர். மேலும் வானிஷிங் ட்வின் சிண்ட்ரோம் என்ற நோயினால் குழந்தை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இது 5 லட்சத்தில் ஒருவருக்கு மட்டுமே ஏற்படும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்..