நாசா விண்வெளியை ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த சமயத்தில் ஆகஸ்ட் 11 அன்று அரிதான வால் நட்சத்திரம் ஒன்றை பார்த்துள்ளது. நிஷிமுரா என்ற பெயருடைய அந்த வால் நட்சத்திரம் 500 வருடங்களுக்கு முன்பு பூமிக்கு மிக அருகே வந்து சென்றுள்ளது. இந்நிலையில் அது மீண்டும் பூமிக்கு அருகே வர இருப்பதாக தெரியவந்துள்ளது.

அதன்படி செப்டம்பர் 12 அன்று பூமியிலிருந்து 78 மில்லியன் மைல் தொலைவில் நிஷிமுரா வால் நட்சத்திரம் வர இருப்பதாகவும் இந்த வால் நட்சத்திரத்தை நாம் வெறும் கண்களால் பார்க்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சூரியனை சுற்றி வரும் இந்த வால் நட்சத்திரத்தை நாம் சூரிய உதயத்திற்கு சிறிது நேரத்திற்கு முன்பும் சூரிய அஸ்தமனத்திற்கு சிறிது நேரத்திற்கு பிறகும் பார்க்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.