இண்டிகோ விமானத்தில் ஒரு பயணி, விமானத்தில் கட்டாயமாக இருக்க வேண்டிய பாதுகாப்பு உபகரணமான லைஃப் ஜாக்கெட்டைத் திருட முயன்ற சம்பவம், சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், ஒரு பயணி மற்றொருவரை சந்தேகித்து, அவரது பையை திறக்கச் சொல்லும் காட்சி தெளிவாக பதிவு உள்ளது.
View this post on Instagram
பையைத் திறந்தபோது அதனுள் லைஃப் ஜாக்கெட் இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்த பயணி, “நீங்கள் எங்கள் பாதுகாப்பு சாதனத்தை உங்கள் பையில் வைத்திருக்கிறீர்கள். இது தவறு!” என்று கண்டனம் தெரிவித்தார். இந்த வீடியோ தற்போது இன்ஸ்டாகிராமில் பதிவேற்றப்பட்டு 2 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகள் பெற்றுள்ளது. இது பல பயணிகளிடையே பாதுகாப்பு குறித்த கவலைகளை உருவாக்கியுள்ளது.
சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். ஒருவர், “அவரை விமானப் பயணத்திலிருந்து நிரந்தரமாகத் தடை செய்ய வேண்டும். இது பயணிகளின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் செயல்” என்று கடுமையாக விமர்சித்தார். சிலர், “இது அவசர சூழ்நிலையில் வாழ்நிலையை பாதிக்கக்கூடியது” என்றும் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்நிலையில், இண்டிகோ நிறுவனத்திடமிருந்து இதுவரை ஏதேனும் அதிகாரப்பூர்வ பதில் கிடைக்கவில்லை. சம்பவம் நடைபெற்ற விமான எண், பாதை மற்றும் தேதி ஆகிய விவரங்களும் உறுதியாகவில்லை. சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) இதுகுறித்து உருமாற்றம் அளிக்காத நிலையில், பயணிகள் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.
