சமூக வலைத்தளங்களில் அடிக்கடி பல சேலஞ்சுகள் பிரபலமடைவது வழக்கம். அந்தவகையில் `One chip challenge’ டிக் டாக்கில் பிரபலமடைந்து வருகிறது. உலகின் மிகவும் காரமான இரண்டு மிளகுகளின் கலவையில் செய்யப்பட்டுள்ள Pacqui சிப்ஸை தண்ணீர் குடிக்காமல் சாப்பிட வேண்டும் என்பதுதான் அந்த சேலஞ்ச். இந்நிலையில் அமெரிக்காவில் மாசூசெட்ஸைச் சேர்ந்த ஹாரிஸ் வோலாபா என்ற 14 வயது சிறுவன்.

இவர் ஸ்பைசி சிப்ஸ் சாப்பிடும் சேலஞ்சை முயற்சித்தபோது பரிதாபமாக உயிரிழந்துள்ளார். ஸ்பைசி சிப்ஸ் சேலஞ்ஜை முயற்சித்த சில மணி நேரத்திலேயே கடும் வயிற்றுவலி ஏற்பட்டு மாணவன் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.