1975 ஆம் வருடம் அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் 18 வயதுக்கு உட்பட்ட சிறுமி ஒருவர் தனது தோழியுடன் பள்ளியில் இருந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத ஒருவரால் பாலியல் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளார். இது குறித்து சிறுமி புகார் அளித்து அந்த மர்ம நபர் கூறித்த அடையாளங்களை கூறிய நிலையில் வெள்ளை இன மக்கள் வசிக்கும் அந்த பகுதியில் இருந்து ஆப்பிரிக்க இனத்தை சேர்ந்த மேக் என்பவரை காவல் துறையினர் கைது செய்தனர். நீதிமன்றமும் அவர்தான் குற்றவாளி என முடிவு செய்து நீண்டகால சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.

இதனிடையே 1992 ஆம் வருடம் இன்னசென்ஸ் ப்ராஜெக்ட் என்ற அமைப்பு உருவாகி குற்ற சம்பவங்களில் ஈடுபடாமல் கைது செய்யப்பட்டவர்கள் காப்பாற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டது. அவர்கள் மேக் சம்பந்தப்பட்ட வழக்கை கையில் எடுத்து விசாரித்தபோது டிஎன்ஏ பரிசோதனை மூலம் மேக் நிரபராதி என கண்டறியப்பட்டது. இதையடுத்து நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு 47 வருடம் செய்யாத குற்றத்திற்காக சிறை தண்டனை அனுபவித்த மேக் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.