எலான் மஸ்க்  ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியதில் இருந்தே பல அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார். முதலில், ட்விட்டர் நீலப்பறவை லோகோவை மாற்றி எக்ஸ் என்ற புதிய லோகோவை அறிமுகப்படுத்தினார். தற்போது அதிலும் சில மாற்றங்களை செய்து இறுதி வடிவம் கொடுத்துள்ளார். இவரது நடவடிக்கைகளுக்கு பல விமர்சனங்கள் வந்தாலும், அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் தன் மனதில் நினைத்ததை செய்து வருகிறார்.

இந்நிலையில் ட்விட்டர்(X)ஐ எலான் மஸ்க் வாங்கியதில் இருந்து நிறைய மாற்றங்களைச் சந்தித்து வருகிறது. குறிப்பாக நஷ்டத்தில் இருந்து மீட்க பணியாளர்கள் நீக்கம் அலுவலக பொருட்கள் ஏலம் விடப்பட்டது. மஸ்க் ட்விட்டரை 44 பில்லியன் டாலர்களுக்கு வாங்கினார். இதற்காக தனது ஸ்பேஸ் X ராக்கெட் நிறுவனத்திடம் ரூ.8314 கோடி கடன் வாங்கினார். மஸ்கின் நிதிநிலை கடும் சிக்கலில் உள்ளதாக வால் ஸ்ட்ரீட் ஜேர்னல் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது