நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய தொழிலதிபர் கேதன் அகர்வால் கொலை வழக்கில், தற்போது புதிய திருப்பமாக அவர்களது ‘ஜாதகப் பொருத்தம்’ குறித்த  தகவல் வெளியாகி சமூக வலைத்தளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது. லோஹ்காட் கோட்டையிலிருந்து கேதன் தள்ளிவிட்டுக் கொல்லப்படுவதற்கு முன்பு, இருவீட்டாரும் முறைப்படி ஜாதகம் பார்த்துதான் இந்தத் திருமணத்தை முடிவு செய்துள்ளனர். கேதனின் தந்தையும், சியாவின் சகோதரர் சாஹிலும் பிரபல ஜோதிடர் ஒருவரை அணுகி இருவரின் ஜாதகங்களையும் கணித்துள்ளனர்.

அப்போது, 36 பொருத்தங்களில் 27 பொருத்தங்கள் மிகச் சரியாக அமைந்து, ஜாதகத்தில் எந்தவொரு தோஷமும் இல்லை என்று ஜோதிடர்கள் உறுதியளித்துள்ளனர். மேலும், கேதனுக்கு ‘தேவ கணம்மற்றும் சியாவிற்கு ‘மனுஷ கணம்’ இருந்ததால், இருவருக்குள்ளும் சிறந்த புரிதல் இருக்கும் என்றும், இவர்களது எதிர்கால வாழ்க்கை மிகச் சிறப்பாக அமையும் என்றும் ஜோதிடர்கள் கணித்த பிறகே இந்தத் திருமணத்திற்கு இரு குடும்பத்தினரும் பச்சைக்கொடி காட்டியுள்ளனர்.

இந்தியாவில் ஜாதகம் பார்த்துத் திருமணம் செய்வதில் எந்தவொரு அறிவியல் பூர்வமான காரணமும் இல்லை என்றாலும், இன்றும் பெரும்பாலான சுபகாரியங்களுக்கு ஜாதகத்தை நம்புவது வழக்கமாக உள்ளது. ஆனால், சியா மற்றும் கேதன் விஷயத்தில் கிரகங்களின் கணிப்பையெல்லாம் பொய்யாக்கி, திருமணம் நடப்பதற்கு முன்பே சியாவின் கள்ளக்காதலால் கேதனின் உயிர் பறிபோயுள்ளது. ஜாதகத்தில் 100% தோஷமில்லாத, மிகச்சிறந்த பொருத்தம் என்று ஜோதிடர்களால் வாழ்த்தப்பட்ட ஒரு ஜோடியின் வாழ்க்கை, கள்ளக்காதலால் கொடூரக் கொலையில் முடிந்துள்ளது ஒட்டுமொத்த சமூகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.