2024-25 ஆம் நிதி ஆண்டுக்கான தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று சட்டமன்றத்தில் வாசித்தார். அடுத்த இரண்டு ஆண்டுகளில் 50 ஆயிரம் இளைஞர்களுக்கு அரசு பணி வழங்கப்படும். வரும் ஜூன் மாதத்திற்குள் 10000 பணியிடங்கள் நிரப்பப்படும். இதுவரை 60 ஆயிரத்து 567 இளைஞர்களுக்கு பணி நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளது. உலகை வெல்லும் இளைய தமிழகத்தை படைக்கும் உரிய நோக்கத்தோடு நான் முதல்வன் திட்டத்தின் மூலம் இதுவரை சுமார் 28 லட்சம் மாணவர்கள் பயிற்சி பெற்றுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.