மகாராஷ்டிராவின் நவி மும்பை பகுதியில் நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோபர்கைரனே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பணியாற்றும் 35 வயதான பெண் ஆசிரியர் ஒருவர், தனது பள்ளியில் படிக்கும் 10ஆம் வகுப்பு மாணவனுடன் முதலில் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி, பின்னர் வீடியோ அழைப்பில் ஆபாசமான செயல்களில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

ஜூலை 23-ஆம் தேதி இரவு, குற்றம் சாட்டப்பட்ட பெண் ஆசிரியை, மாணவனுக்கு வீடியோ அழைப்பு செய்தபோது அரை நிர்வாண நிலையில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் மாணவனுக்கு முன்னிலையில் ஆபாசமான செயலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு உள்ளது.

இந்த வீடியோ மாணவனின் மொபைலில் சேமிக்கப்பட்டிருந்தது. சமீபத்தில் மாணவனின் தாயார் அவரது செல்போனை சரிபார்த்தபோது பெண் ஆசிரியரின் வீடியோ காட்சிகள் இருந்ததை கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். உடனடியாக கோபர்கைரேன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில், போலீசார் சிசிவிலின் கீழ் விசாரணை மேற்கொண்டு, போக்சோ சட்டம் பிரிவு 11 மற்றும் 12 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, பெண் ஆசிரியையை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஆசிரியர் உல்வே பகுதியைச் சேர்ந்தவர்.

போலீசார் தெரிவித்ததாவது, அந்த பெண் ஆசிரியை மாணவனுடன் இன்ஸ்டாகிராமில் நட்பாக பேசி, பின்னர் மணிக்கணக்கில் உரையாடியதும் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பெண் ஆசிரியர், செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அங்கு அவர் ஒரு நாள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டார்.

மாணவனின் மனநிலையை பாதிக்கும் வகையில் நடந்த இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. குழந்தைகள் மீதான பாலியல் வன்முறையை தடுக்கும் போக்சோ சட்டத்தின் கீழ் கெடுபிடியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என போலீசார் உறுதியளித்துள்ளனர்.