ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத் பகுதியில் நடைபெற்ற ஐசிஐசிஐ வங்கி ஊழியரின் கொலை சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஷீபா என்ற பெண், ஐசிஐசிஐ வங்கியில் பணிபுரிந்து வந்தவர். கடந்த 10 ஆண்டுகளாக தீபக் என்ற நபரை காதலித்தார்.

இருவரும் அடிக்கடி ஹோட்டலில் அறை எடுத்து உல்லாசமாக இருந்துள்ளனர். காதலர்கள் திருமணம் செய்யத் திட்டமிட்டிருந்தாலும், மத வேறுபாடுகள் காரணமாக தீபக் குடும்பம் இந்த உறவை ஏற்க மறுத்ததாம்.

இதனால் விரக்தியில் இருந்த ஷீபா, சமீபத்தில் ஓயோ ஓட்டலில் அறை எடுத்து தங்கியிருந்தனர். அன்றைய தினம், ஓட்டல் அறை கதவு நீண்ட நேரமாக திறக்கப்படாததைப் பார்த்த ஊழியர்கள், போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

அறைக்குள் சென்ற போலீசார், ஷீபா சடலமாக கிடப்பதை கண்டனர். அவரது கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் இருந்தது. இதனையடுத்து போலீசார்  விசாரணையை தொடங்கிய நிலையில் தப்பியோடிய தீபக் கைது செய்யப்பட்டார்.

விசாரணையில், “திருமணத்திற்கு தொடர்ந்து வற்புறுத்தியதால் ஏற்பட்ட தகராறு காரணமாக, கோபத்தில் கழுத்தை நெரித்தேன்” என அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். தற்போது தீபக் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

ஓயோ ஓட்டல்களில் ஒழுங்குகள் மற்றும் அடையாள சான்றிதழ் போன்ற புதிய விதிமுறைகள் நிறைவேற்றப்பட்டபோதிலும், இத்தகைய கொடூர சம்பவங்கள் தொடர்வது, சமூகத்தையும், பெண்களின் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்குகிறது.