தமிழக அரசியல் வட்டாரத்தையே அக்குவேர் ஆணிவேராக உலுக்கும் வகையில், அ.தி.மு.க-வின் மிக முக்கியத் தூண்களாகக் கருதப்படும் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் உட்பட மேலும் 10 அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, தமிழக வெற்றிக் கழகத்தில் (த.வெ.க) இணையவிருப்பதாக ஆங்கில ஊடகம் ஒன்றில் அதிரடி செய்தி வெளியாகியுள்ளது. சட்டசபையில் தங்களது பலத்தை நிலைநாட்டி, தனிப் பெரும்பான்மையைப் பெறுவதற்காக த.வெ.க தலைமை “ஆபரேஷன் எல்” (Operation L) என்ற பெயரில் இந்த ரகசிய மெகா ஆபரேஷனை கையில் எடுத்துள்ளதாக அந்தச் செய்தியில் விவரிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே அ.தி.மு.க-வைச் சேர்ந்த 6 எம்.எல்.ஏ-க்கள் தங்களது பதவிகளைத் துறந்துவிட்டு முதலமைச்சர் விஜய் முன்னிலையில் த.வெ.க-வில் இணைந்துள்ள நிலையில், இந்த அடுத்தகட்ட அதிரடி மூவ் அரசியல் களத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதிக்குள் இந்த 10 முக்கிய அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களும் தங்களது பதவிகளை அதிகாரப்பூர்வமாக ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க-வில் இணைய அதிக வாய்ப்புகள் இருப்பதாகக் கூறப்படுவதால், அ.தி.மு.க தலைமை முற்றிலும் ஆடிப்போயுள்ளது.
