தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய், பொதுப்பணித்துறையின் செயல்பாடுகள் மற்றும் மேற்கொள்ள வேண்டிய முன்னெடுப்புகள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, துறை செயலாளர் செல்வராஜ் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

மாநிலத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க பாரம்பரியக் கட்டிடங்களைப் பாதுகாத்தல், அவற்றை உரிய முறையில் புதுப்பித்தல் மற்றும் சீரமைத்தல் குறித்து இதில் முக்கிய ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

மேலும், அரசு சார்பில் பராமரிக்கப்படும் நினைவகங்கள் மற்றும் மணிமண்டபங்களின் தற்போதைய நிலை குறித்தும் முதலமைச்சர் கேட்டறிந்தார்.

பொதுப்பணித்துறை பணிகளைத் துரிதப்படுத்துவது குறித்தும், அரசு கட்டமைப்புகளைப் பேணிக்காப்பது குறித்தும் அதிகாரிகளுக்குத் தேவையான அறிவுறுத்தல்களை முதலமைச்சர் விஜய் வழங்கினார்.

இந்த ஆய்வுக்கூட்டம் அரசின் உள்கட்டமைப்பு மற்றும் கலாச்சாரச் சின்னங்களைப் பாதுகாப்பதில் முதலமைச்சரின் அக்கறையை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.