தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கரைகதஅள்ளி கிராமத்தில் கூலி வேலை பார்க்கும் செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வள்ளி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 3 மகள்கள் இருந்துள்ளனர். நேற்று முன்தினம் செல்வம் தனது 3 மகள்களையும் மோட்டார் சைக்கிளில் அழைத்துக் கொண்டு துணி எடுப்பதற்காக பஞ்சப்பள்ளி நோக்கி சென்றுள்ளார். இந்நிலையில் கரகதஅள்ளி பேருந்து நிறுத்தம் அருகே இருக்கும் வளைவில் திரும்பிய போது எதிரே வந்த சரக்கு வாகனம் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த 4 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி செல்வத்தின் கடைசி மகளான 1 வயதுடைய சௌடேஸ்வரி என்ற குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. மற்ற 3 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.