திமுக மாநாட்டில் மொழிப்போர், ஹிந்தி திணிப்பு குறித்து உரையாற்றிய கம்பம் செல்வேந்திரன், 1938லே ஹிந்தி போராட்டம் நடந்த போது  நம்முடைய தலைவர் கலைஞர் 14 வயது மாணவர்…  திருவாரூர் பள்ளியில் மாணவர்….  தமிழ் கொடிபிடித்து மாணவர்களை திரட்டி,  வாருங்கள் எல்லோரும் போருக்கு செல்வோம்….  வந்திருக்கும் ஹிந்தி பேயை விரட்டிடுவோம்  என்று அணி வகுத்து வந்தார். நம்முடைய தலைவர் கலைஞர் 14 வயதில் ஓடி வந்த ஹிந்தி பெண்ணே…  நீ தேடி வந்த கோழை அல்ல என்று முழக்கமிட்டார் அந்த பிஞ்சு பருவத்தில்….

1938 இல் முதல் முறையாக அரசியலில் அடி எடுத்து வைத்து மொழி தளத்தில்  நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள்…. 1938லே  1164 பேர் சிறைக்கு போனார்கள். இதில் 73 பேர் பெண்கள்,  32 பேர் குழந்தைகள்,  ஹிந்தியை எதிர்த்து 32 குழந்தைகள் சிறைக்குச் சென்றார்கள் என்பது உலகத்தின் மிகப்பெரிய வரலாறு என்பதை நாம் மறந்து விடக்கூடாது.

அதற்குப் பிறகும் 1948. ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் விஷத்தில் தேனை தடவி தருவதைப் போல விருப்பக்பாடமாக கூட வைத்துக் கொள்ளுங்கள் என்று சொன்னார்கள். அதை விருப்ப பாடமாக கொண்டு வந்தார்கள்…  அப்பொழுதும் பெரியார் எதிர்த்தார். எனக்கு வயது 70 ஆகிறது. நான் அடுத்து எடுத்து வைக்கிற அடி சுடுகாடு தான். இந்த ஹிந்தியை ஒரு கை பார்த்துவிட்டுப் போகிறேன் என்று தான்  அவரும் சொன்னார்.  ஆகவே ஹிந்தி என்பது முடியாத பிரச்சனையாக இந்த நாட்டில் இருக்கிறது.

மத்தியில் யார் ஆட்சிக்கு வந்தாலும்,  ஹிந்தியில் திணிப்பதில்  அவர்கள் சுணக்கம் காட்டுவதில்லை.  நம் தோழமை கட்சியே ஆட்சிக்கு வந்தாலும்,  அவர்கள் ஹிந்தியை திணிப்பதும்…. நாம் ஹிந்தியை எதிர்ப்பதும் வழக்கமான ஒன்றாக இருக்கிறது. ஆக இதற்கு ஒரு முடிவை கட்ட வேண்டும். இந்த முடிவு நம்முடைய தளபதி ஸ்டாலின் அவர்கள் காலத்தில்…  உதயநிதி அவர்கள் காலத்தில் நடக்க வேண்டும் என்று சொல்லி விடைபெறுகிறேன்.