அமெரிக்காவில் கடந்த 2004 ஆம் ஆண்டு தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து மார்க் ஜூக்கர் பெக் facebook நிறுவனத்தை தொடங்கினார். இது உலகம் முழுதும்  உள்ள பயனர்களுக்கு கருத்து பரிமாற்றம் செய்வதற்கு முன்னணி தளமாக திகழ்கிறது. தற்போது மெட்டா நிறுவனத்தின் கீழ் facebook, instagram மற்றும் whatsapp போன்ற செயலிகள் இயங்கி வருகிறது. இந்நிலையில் மெட்டா நிறுவனம் மீது தற்போது பிரசல்ஸ் நாடு ஒரு புகாரினை முன் வைத்துள்ளது. அதாவது பேஸ்புக் சமூக வலைதளத்தின் மூலம் போட்டியாளர்களை ஒடுக்கும் விதமாக முறையற்ற வர்த்தகத்தில் மெட்டா  ஈடுபட்டு வருவதாக அந்த நாடு குற்றம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ஐரோப்பிய ஒழுங்குமுறை ஆணையத்தில் 27 நாடுகளின் அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணை நீண்ட காலமாக நடந்து வந்த நிலையில் தற்போது மெட்டா நிறுவனத்திற்கு இந்திய மதிப்பில் சுமார் 7,120 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த புகாரால் முதலீட்டாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படவில்லை என்று மெட்டா கூறியுள்ளது. மேலும் இது தொடர்பாக மேல்முறையீடு செய்யப் போவதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.