இத்தாலியின் வடக்கு பகுதியில் உள்ள ப்ரெஷியா நகரத்தில் உள்ள பரபரப்பான நெடுஞ்சாலையில், ப்ரீசியா ஆர்.ஜி. மாடல் சிறிய ரக விமானம் கட்டுப்பாட்டை இழந்து விழுந்து தீப்பிடித்து எரிந்தது. இந்த பயங்கர விபத்தில், மிலனைச் சேர்ந்த 75 வயதான வழக்கறிஞர் செர்ஜியோ ரவாக்லியா மற்றும் அவரது 60 வயதான தோழி ஆன் மரியா டி ஸ்டெஃபானோ ஆகிய இருவரும் உயிரிழந்தனர். விமானம் நெடுஞ்சாலையில் விழுந்ததும் தீப்பிடித்து எரிந்ததால், அப்பகுதி முழுவதும் புகை மூடிய சூழ்நிலையில் காணப்பட்டது.
விபத்தின் போது, அந்த நெடுஞ்சாலையில் சென்ற சில வாகனங்கள் தீயில் சிக்கி எரிந்தன. இதில் இரண்டு வாகன ஓட்டிகள் காயமடைந்தனர். இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.
விமானத்தை அவசரமாக தரையிறக்க முயன்றபோதே கட்டுப்பாட்டை இழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து குறித்து இத்தாலி விமானப்பராமரிப்பு மற்றும் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Scary. An ultra-light ProMecc Freccia aerospace plane crashed on the A21 highway yesterday between Flero and Azzano Mella in Brescia, Italy. Two people lost their life in the crash. Vehicles on the highway had a narrow escape. pic.twitter.com/F6p7ai2udY
— Aditya Raj Kaul (@AdityaRajKaul) July 24, 2025
“>
