அரசு பயணமாக வாஷிங்டனில் இருந்து புறப்பட்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கையில் தனது வெளியுறவு கொள்கை முன்னுரிமைகளைத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
ஈரான் உடனான பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் இருக்க, அமெரிக்காவில் அதிகரித்து வரும் எரிபொருள் விலை மற்றும் வாழ்க்கைச் செலவுகள் குறித்து கவலை கொள்கிறீர்களா என்ற கேள்விக்கு, “சிறிதளவு கூட இல்லை” என்று அவர் அதிரடியாகப் பதிலளித்தார்.
ஈரானிடம் அணுஆயுதங்கள்இருக்கக்கூடாது என்பதே தனது முதன்மையான நோக்கம் என்று குறிப்பிட்ட டிரம்ப், அமெரிக்கர்களின் நிதிநிலைமை குறித்தோ அல்லது வேறு யாரைப் பற்றியோ தான் சிந்திப்பதில்லை என்று வெளிப்படையாகத் தெரிவித்துச் சென்றார்.
அதிபரின் இந்த நேரடியான பதில், உள்நாட்டுப் பொருளாதாரத்தை விட சர்வதேச பாதுகாப்பு மற்றும் ஈரான் விவகாரத்திற்கே அவர் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார் என்பதைக் காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
