வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி அமெரிக்கப் படைகளால் கடத்தப்பட்டு, அந்நாடு அமெரிக்காவின் மறைமுகக் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போதைப்பொருள் பயங்கரவாதக் குற்றச்சாட்டின்கீழ் மதுரோ அமெரிக்கச் சிறையில் அடைக்கப்பட்டதைத் தொடர்ந்து, டெல்சி ரோட்ரிக்ஸ் இடைக்கால அதிபராகப் பொறுப்பேற்றுள்ளார்.

எண்ணெய் வளம் மிக்க வெனிசுலாவில் மீண்டும் அமெரிக்காவின் எண்ணெய் கொள்முதல் தொடங்கப்பட்டுள்ளது.இந்நிலையில், அமெரிக்காவின் 51-வது மாகாணமாக வெனிசுலாவை இணைக்கும் டொனால்ட் டிரம்ப்பின் அதிரடித் திட்டத்தை இடைக்கால அதிபர் டெல்சி திட்டவட்டமாக நிராகரித்துள்ளார்.

ஏற்கனவே கனடாவை இணைக்க முயன்று தோல்வியடைந்த நிலையில், தற்போது வெனிசுலா மீது டிரம்ப் கண் வைத்துள்ளார். அமெரிக்காவின் கட்டளைக்கு இணங்கவில்லை என்றால் மதுரோவின் கதிதான் ஏற்படும் என டிரம்ப் மிரட்டல் விடுத்தும், “நாங்கள் எங்கள் சுதந்திரத்தை நேசிக்கிறோம்” என்று கூறி டெல்சி இந்த முன்மொழிவை மறுத்துள்ளார்.