அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது தேர்தல் பரப்புரையை மீண்டும் விறுவிறுப்பாகத் தொடங்கியுள்ளார். ஏற்கனவே ‘குலவிளக்குத் திட்டம்’ மற்றும் ‘வங்கி கடன் தள்ளுபடி’ போன்ற மெகா வாக்குறுதிகளை அறிவித்து மக்கள் கவனத்தை ஈர்த்த நிலையில், தற்போது மீனவர்களுக்கான ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மீன்பிடி தடைக்காலத்தின் போது வழங்கப்படும் நிவாரணத் தொகையை அதிரடியாக உயர்த்தப்போவதாக அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது நடைமுறையில் உள்ள ₹8,000 நிவாரணத் தொகையை, அதிமுக ஆட்சி அமைந்தால் ₹4,000 உயர்த்தி, மொத்தம் ₹12,000-ஆக வழங்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி உறுதி அளித்துள்ளார். இந்த அறிவிப்பு மீனவ மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், தேர்தல் களம் மேலும் சூடுபிடித்துள்ளது. எடப்பாடியின் இந்தத் தொடர் வாக்குறுதிகள் மற்ற கட்சிகளுக்குப் பெரும் சவாலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
