தமிழக அரசு வன்முறைக்கு இலக்காகும் பெண்களுக்கு உதவுவதற்காக அமைக்கப்பட்ட தனி மையத்தில் தமிழ், ஆங்கிலம் மற்றும் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளும் தெரிந்த பெண்கள் மட்டுமே பணியமர்த்தப்படுவார்கள் என்று உத்தரவிட்டுள்ளது. இதற்கு தற்போது நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனங்களை தெரிவித்ததோடு மும்மொழி தெரிந்த பெண்கள் மட்டுமே வேலைக்கு விண்ணப்பிக்கலாம் என்று எப்படி உத்தரவிடலாம் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதோடு ஹிந்திக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் திமுக அரசு தற்போது ஹிந்தி தெரிந்தால் மட்டும் தான் வேலை என்று அறிவித்துள்ளது. இது அப்பட்டமான ஹிந்தி திணிப்பு தானே.? மும்மொழி கொள்கையை திணிப்பது தான் உங்களுடைய திராவிட மாடலா என்று கூறியுள்ளார். மேலும் இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
