ஐபிஎல் 2026 சீசன் தொடங்குவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணிக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
அந்த அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணா, சமீபத்தில் நடைபெற்ற பிசிசிஐ (BCCI) விருது வழங்கும் விழாவிற்கு ‘வாக்கிங் ஸ்டிக்’ உதவியுடன் வருகை தந்தது ரசிகர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
Harshit Rana’s injury is quite serious. He is not able to walk properly and is using a stick to walk. Even then, he came to the Naman Awards show today. If he had not come, it would have been completely understandable. Because of this injury, he will also not play in this year’s… pic.twitter.com/KIGdiSdHYV
— 𝐑𝐮𝐬𝐡𝐢𝐢𝐢⁴⁵ (@rushiii_12) March 15, 2026
தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டி20 உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தின் போது ஹர்ஷித் ராணாவிற்கு முழங்காலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதற்காக கடந்த பிப்ரவரி 9-ஆம் தேதி அவருக்கு மும்பையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
தற்போது அவர் குணமடைந்து வந்தாலும், அவர் இன்னும் முழுமையாக நடக்க முடியாத நிலையில் இருப்பது வீடியோக்கள் மூலம் தெரியவந்துள்ளது.
இதனால் அவர் இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் முழுவதையும் தவறவிட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. கே.கே.ஆர் அணி ஏற்கனவே சில வீரர்களை இழந்துள்ள நிலையில், ஹர்ஷித் ராணாவின் இந்த நிலை அந்த அணியின் பந்துவீச்சு பலத்தை வெகுவாகப் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
