பொன்னேரியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் உரையாற்றிய காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, தமிழக மக்களுக்காகப் பல்வேறு கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அள்ளி வீசியுள்ளார். குறிப்பாக, கல்லூரி மாணவர்களின் உயர்கல்விக்கு உதவும் வகையில் மாதம் ₹2,000 உதவித்தொகை வழங்கப்படும் என அறிவித்தார். அதேபோல், குடும்பத் தலைவிகளுக்கும், மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கும் மாதம் ₹2,000 உதவித்தொகை வழங்கப்படும் எனத் தெரிவித்து வாக்காளர்களைக் கவர்ந்துள்ளார்.
பெண்களுக்குப் பொருளாதார ரீதியாக முக்கியத்துவம் அளிக்கும் வகையில், முதல்முறையாகச் சொத்து வாங்கும் பெண்களுக்குப் பத்திரப்பதிவு (Registration) முற்றிலும் இலவசம் என்ற அதிரடித் திட்டத்தையும் அவர் அறிவித்தார். தமிழகத்தில் திமுக – காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு பெருகி வரும் நிலையில், ராகுல் காந்தியின் இந்த நேரடிப் பலன் அளிக்கும் திட்டங்கள் இளையோர் மற்றும் பெண்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
