மும்பையில் கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில், அந்தேரி பகுதியில் மனிதாபிமானத்தை பறைசாற்றும் நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று நடந்துள்ளது.
அந்தேரி லோகா (AndheriLOCA) பகிர்ந்துள்ள வீடியோவில், ஒரு பெரியவருடன் சேர்ந்த நான்கு ஐந்து சிறுவர்கள் சாலையோரம் நின்று கொண்டு, அந்த வழியாக செல்லும் ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் பாதசாரிகளுக்கு குளிர்ந்த சர்பத் வழங்கி அசத்தியுள்ளனர்.
View this post on Instagram
வெயிலின் தாக்கத்தால் தாகத்தில் தவித்த ஆட்டோ டிரைவர்கள், சிறுவர்களின் இந்த எதிர்பாராத அன்பைக் கண்டு வியந்து போய், மகிழ்ச்சியுடன் சர்பத்தை வாங்கி குடித்தனர்.
சுட்டீஸ்களின் இந்தச் செயலும், அவர்கள் காட்டிய அக்கறையும் தற்போது சமூக வலைதளங்களில் பலரின் பாராட்டுக்களைப் பெற்று வைரலாகி வருகிறது.
