சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் உள்ள வீட்டு வசதி வாரிய அலுவலகத்தில் சினிமா பாணியில் ஒரு சுவாரசியமான சம்பவம் நடந்துள்ளது.
நீண்ட நாட்களாக தனது கோப்பு (File) எங்கே இருக்கிறது என்று தெரியாமல் அலைக்கழிக்கப்பட்ட நபர், அதிகாரியின் மெத்தனப் போக்கைக் கண்டு ஆவேசமடைந்தார்.
In Bilaspur, Chhattisgarh, a man emptied a packet of almonds on a housing board official’s table.
MAN : “Eat some almonds, it might help you remember where you kept my missing file” 😳 pic.twitter.com/Rtre3rICxD
— News Algebra (@NewsAlgebraIND) April 18, 2026
நேராக அதிகாரியின் அறைக்குள் நுழைந்த அவர், தான் கொண்டு வந்த பாதாம் பாக்கெட்டை பிரித்து அதிகாரி மேஜையிலேயே கொட்டினார். “இந்தாங்க பாதாம் சாப்பிடுங்க… அப்படியாவது என் ஃபைலை எங்கே வச்சீங்கன்னு உங்களுக்கு ஞாபகம் வருதான்னு பார்ப்போம்” என அவர் நக்கலாகக் கூற, அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.
கோப்புகளைத் தேடுவதில் அலட்சியம் காட்டிய அதிகாரியை, பாதாம் பருப்புகளைக் கொடுத்து அந்த நபர் கிண்டல் செய்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
