பிரதமர் வேட்பாளராக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏன் இருக்கக்கூடாது என காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லா கூறியுள்ளார்.

மு.க. ஸ்டாலின் இன்று தனது70வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதை திமுகவினர் வெகு கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். சென்னையில் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் பரூக் அப்துல்லா சென்னை வந்தார்.

விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ஸ்டாலின் ஏன் பிரதமர் வேட்பாளராக இருக்கக்கூடாது? அதில் என்ன தவறு. எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக தேர்தலை சந்தித்தப்பின் பிரதமர் தேர்வு குறித்து முடிவு எடுக்கலாம் என்றார்.