சீனாவில் உள்ள ஒரு பள்ளியில், சக தோழியை இரண்டு பெண் மாணவிகள் மொட்டை மாடியில் இருந்து கீழே தள்ளி கொலை செய்ய முயன்ற நெஞ்சை பதறவைக்கும் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பாதிக்கப்பட்ட மாணவியும், குற்றம் சாட்டப்பட்ட அந்த இரண்டு மாணவிகளும் தோழிகள் என்று கூறப்படும் நிலையில், அவர்களுக்குள் ஏற்பட்ட ஏதோ ஒரு பகையினால் இந்த விபரீத முடிவை அவர்கள் எடுத்துள்ளனர். திட்டமிட்டபடி, அந்த மாணவியை மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்று கீழே தள்ளிவிட்டு, அதை ஒரு ‘தற்கொலை’ போல ஜோடிக்க அவர்கள் முயன்றுள்ளனர்.
A horrifying incident in China unfolded when two female students attempted to throw a friend off a rooftop and make it look like a suicide. A teacher intervened just in time to stop it.😬 pic.twitter.com/fNxNqmKzJ5
— kira 👾 (@kirawontmiss) June 14, 2026
சரியான நேரத்தில் அந்த இடத்திற்கு வந்த ஒரு ஆசிரியர், மாணவிகளின் விசித்திரமான செயல்பாட்டைக் கண்டு சுதாரித்துக் கொண்டார். அவர்கள் மாணவியைக் கீழே தள்ள முயன்ற அதே நொடியில், மின்னல் வேகத்தில் செயல்பட்டு அந்த மாணவியைக் காப்பாற்றினார். ஆசிரியரின் இந்த சமயோசித புத்தியால் ஒரு பெரும் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவம் ஒட்டுமொத்த சீனாவையும் உலுக்கியுள்ள நிலையில், சம்பந்தப்பட்ட மாணவிகள் மீது காவல்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
