சமூக வலைதளங்களில் தற்போது ஒரு சிறுவன் தனது ஸ்கூட்டியில் பனிக்கட்டிகளை ஏற்றிக்கொண்டு, அதனை மிக ஆபத்தான முறையில் ஓட்டும் வீடியோ ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வீடியோவில், ஸ்கூட்டியின் முன்பக்கத்திலும் இருக்கை மீது பின்னாலுமாக பனிக்கட்டிகளை அடுக்கி வைத்து, சிறுவன் அதில் சாய்ந்து ஒட்டும் காட்சி பதிவு செய்யப்பட்டுள்ளது. சாலையில் வேகமாக பாம்பைப் போல ஸ்கூட்டியை அசைத்து ஓட்டும் அந்த சிறுவனைப் பார்த்த பிறகு, பலரும் அதிர்ச்சியுடன் தங்கள் விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர்.
View this post on Instagram
A post shared by ghantaa (@ghantaa)
“>
இந்த வீடியோ, 34 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர். “தூம் 5 ஹீரோ போல இருக்குறான்”, “வேகத்தடை வரட்டும் என நம்புகிறேன்”, “இது பார்ஃப் ரைடர் மாதிரி இருக்கு” என்று பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.
வாகனங்களில் இப்படிப் பொருட்களை ஏற்றி ஆபத்தான முறையில் ஓட்டுவது, சட்டரீதியாக தடை செய்யப்பட்டதாக இருக்க, இவ்வாறு நடத்துபவர்கள் தங்கள் உயிரையே ஆபத்தில் இழுக்கின்றனர் என்பதே நிபுணர்களின் எச்சரிக்கை.
