ஷாருக்கான் நடிப்பில் பதான் திரைப்படத்தின் பாடல் மற்றும் டிரைலர் வெளியானதில் இருந்தே பல சர்ச்சைகளை சந்தித்து வந்தது. எனினும் பதான் படம் இந்தியாவில் அதிக வசூல் செய்த படங்களில் 2-வது இடம் பிடித்ததோடு பல வசூல் சாதனைகளை படைத்துள்ளது. இந்த படத்தில் இடம்பெற்றுள்ள பேஷாரம் ரங் பாடல் சர்ச்சையில் சிக்கி பல்வேறு விமர்சனங்களை சந்தித்த நிலையில், நடிகர் பிரகாஷ்ராஜூம் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் பிரகாஷ்ராஜ் பேச்சுக்கு தி காஷ்மீர் பைல்ஸ் பட டைரக்டர் விவேக் ரஞ்சன் அக்னிகோத்ரி தன் டுவிட்டர் பக்கத்தில் பதிலடி கொடுத்துள்ளார். அதாவது, ஒரு சிறிய படமான தி காஷ்மீர் பைல்ஸ் படம் அர்பன் நக்சல்ஸ்களுக்கு தூக்கமில்லா இரவுகளை கொடுத்திருக்கிறது. அதில் ஒருவர் அப்படத்தின் பார்வையாளர்களை குரைக்கும் நாய் என குறிப்பிட்டு ஒரு வருடத்துக்கு பிறகும் கஷ்டப்படுகிறார். அந்தகர்(இருள்) ராஜ், பாஸ்கர் எனக்கு எப்படி கிடைக்கும்?, அவன்/அவள் எப்போதும் நீங்கள் என்று குறிப்பிட்டு உள்ளார்.