ஆன்லைன் மூலமாக டாக்ஸி முன்பதிவு செய்யும் செயலிகள் இன்று மக்களின் அன்றாட வாழ்வில் ஒரு அங்கமாகிவிட்டன. ஆனால், சமீபத்தில் ஒரு கேப் டிரைவர் சந்தித்த அனுபவம் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு நபர் தனது பயணத்தை உறுதி செய்தவுடன், சம்பந்தப்பட்ட கேப் டிரைவருக்கு அடுத்தடுத்து ஆபாசமான மற்றும் அநாகரீகமான குறுஞ்செய்திகளை அனுப்பியுள்ளார்.

மேலும் “உடலுறவு வைத்துக்கொள்வீர்களா?” என்பது போன்ற முகம் சுளிக்க வைக்கும் கேள்விகளை அந்த வாடிக்கையாளர் கேட்டது அந்த டிரைவரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பணி நிமித்தமாக வரும் அழைப்புகளை இது போன்ற தவறான நோக்கங்களுக்குப் பயன்படுத்துவது கண்டனத்திற்குரியது.

 

View this post on Instagram

 

A post shared by 𝐕𝐢𝐬𝐡𝐚𝐥 𝐜𝐚𝐛 𝐝𝐫𝐢𝐯𝐞𝐫🚕 (@travelwith_vishalcab)

“>

இந்த விவகாரம் குறித்து செய்திகள் வெளியானதை அடுத்து, அந்த டிரைவருக்கு ஆதரவாகப் பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். பொதுவாக வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு குறித்துத்தான் அதிக விவாதங்கள் நடக்கும், ஆனால் இதுபோன்ற சம்பவங்கள் ஓட்டுநர்களின் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கியுள்ளன.

இந்நிலையில் தொழில்நுட்ப வசதிகளைத் தவறாகப் பயன்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், இதுபோன்ற அநாகரீகச் செயல்களில் ஈடுபடுபவர்களின் கணக்குகளை வாழ்நாள் முழுவதும் முடக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன. கண்ணியமான முறையில் சேவை செய்யும் ஊழியர்களுக்கு இது போன்ற சம்பவங்கள் மன ரீதியாகப் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.