குருகிராமில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில், வளர்ப்பு நாய் ஒன்று அங்கிருந்த பெண் தொழிலாளியை மிகக் கொடூரமாகத் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண் தன்னைத் தற்காத்துக் கொள்ளப் போராடியபோதும், நாயின் உரிமையாளர் எவ்வித முயற்சியும் எடுக்காமல் அமைதியாக வேடிக்கை பார்த்தது அங்கிருந்த கண்காணிப்புக் கேமராவில் பதிவாகியுள்ளது.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், விலங்குகளை வளர்ப்பவர்கள் தகுந்த பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றாதது பொதுமக்களிடையே கடும் கோபத்தை உருவாக்கியுள்ளது. சமூக வலைதளப் பயனர்கள் பலரும் “செல்லப்பிராணிகளின் மீதுள்ள பாசம் மற்றவர்களின் உயிருக்கு ஆபத்தாக முடியக்கூடாது” எனத் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.
I would teach a lesson to that woman if it happens to me https://t.co/rsJWaC44Dy
— A.K.S. (@amitabhkr111) February 11, 2026
“>
இது குறிப்பாக, ஆபத்தான நாய் இனங்களை வளர்ப்பவர்கள் பொது இடங்களில் அவற்றுக்கு வாய்க்கவசம் அணிய வேண்டியதன் அவசியத்தை நெட்டிசன்கள் வலியுறுத்தி வருகின்றனர். பாதிக்கப்பட்ட அந்தப் பெண் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், நாயின் உரிமையாளரின் அலட்சியமான போக்கு குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
