உத்தரப் பிரதேச மாநிலம் அலிகாரில், பத்து மாதங்களுக்கு முன்பு தனது வருங்கால மருமகனுடன் ஓட்டம் பிடித்த பெண், தற்போது அவரையும் கைவிட்டுவிட்டு தனது சகோதரியின் கணவருடன் (பெரியப்பா உறவுமுறை) தலைமறைவாகியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அலிகார் பகுதியைச் சேர்ந்த 38 வயது பெண் ‘சப்னா தேவி. இவருக்குத் திருமணமான நிலையில், கடந்த 2025 ஏப்ரல் மாதம் இவரது மகளுக்கும், ராகுல் என்ற இளைஞருக்கும் திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டது.
நிச்சயதார்த்தத்திற்குப் பிறகு, ராகுலுக்கும் அவரது வருங்கால மாமியாருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, அது காதலாக மாறியுள்ளது. இதன் உச்சகட்டமாக, மகளின் திருமணத்திற்கு 12 நாட்களே இருந்த நிலையில், கடந்த 10 மாதங்களுக்கு முன்பு சப்னா தனது வருங்கால மருமகன் ராகுலுடன் வீட்டை விட்டு வெளியேறினார்.
இந்த விவகாரம் காவல் நிலையத்திற்குச் சென்றபோது, சரிதா தனது கணவர் மற்றும் குழந்தைகளைத் துறந்துவிட்டு, தன்னைவிட 18 வயது இளையவரான ராகுலுடன் வாழப்போவதாகத் திட்டவட்டமாகத் தெரிவித்தார். இதையடுத்து இருவரும் பீகார் மாநிலம் சீதாமர்ஹி பகுதிக்குச் சென்று குடியேறினர். அங்கு ராகுல் துணி வியாபாரம் செய்து பிழைப்பு நடத்தி வந்தார்.
சமீபத்தில் இந்தக் கதையில் யாரும் எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி, ராகுல் வேலைக்குச் சென்றிருந்த நேரத்தில், சப்னா வீட்டில் இருந்த 2 லட்ச ரூபாய் ரொக்கம் மற்றும் நகைகளுடன் மாயமானார்.
இதுகுறித்து ராகுல் தேடியபோது, சப்னா தற்போது தனது பெரியப்பாவுடன் ஓட்டம் பிடித்திருப்பது தெரியவந்தது. காதலுக்காகத் தன் மகளின் வாழ்வைச் சிதைத்து வந்தவர், இப்போது தன்னையும் ஏமாற்றிவிட்டதாக ராகுல் கண்ணீர் மல்கக் குற்றம் சாட்டியுள்ளார்.
பாதிக்கப்பட்ட ராகுல் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால், இந்தச் சம்பவம் பீகார் மாநிலத்தில் நடந்துள்ளதால், தாங்கள் தலையிட முடியாது என்றும், இது தங்களது அதிகார எல்லைக்கு அப்பாற்பட்டது என்றும் கூறி போலீஸார் ராகுலை பீகார் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ச்சியாக உறவு முறைகளைச் சிதைக்கும் வகையில் அந்தப் பெண் எடுத்து வரும் இந்த முடிவுகள், அப்பகுதி மக்களிடையே பெரும் விவாதத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது
