கிழக்கு பெங்களூரைச் சேர்ந்த 57 வயது இல்லத்தரசி ஒருவர், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் டீப்ஃபேக் (Deepfake) காணொளியைப் பார்த்து நம்பி, போலி ஆன்லைன் டிரேடிங் செயலியில் முதலீடு செய்து ₹43.4 லட்சம் பணத்தை இழந்தார். அதிக லாபம் கிடைக்கும் என்று நம்பி, “ACSTRADE” என்ற செயலி மூலம் அவர் ₹23 லட்சம் வரை முதலீடு செய்தார். சேமிப்புத் தீர்ந்த பின், நகைகளை அடமானம் வைத்தும் பணத்தைப் போட்டிருக்கிறார்.

இந்த மோசடியில் சிக்கிய பெண், செப்டம்பர் 24 முதல் அக்டோபர் 27 வரை 13 முறை பணப் பரிமாற்றம் செய்துள்ளார். சந்தேகத்திற்கிடமான செயல்பாடுகள் காரணமாக, அவரது வங்கிக் கணக்கு முடக்கப்பட்ட பின்னரே இது மோசடி என்று தெரியவந்தது. தற்போது சைபர் கிரைம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.