தனஸ்ரீ வர்மாவின் ஸ்டைலான வைரலாகும் புகைப்படங்களுக்கு கணவர் சாஹல் கமெண்ட் செய்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சாஹலின் மனைவி தனஸ்ரீ வர்மா, சமூக ஊடகங்களில் ஸ்டைலான படங்களைப் பகிர்ந்துள்ளார். எப்போதும் சமூக வலைத்தளங்களில் டான்ஸ், வித விதமான போட்டோஸ் பதிவிட்டு ஆக்டிவாக இருக்கும் தனஸ்ரீ  சமீபத்தில் சில புகைப்படங்களை பதிவிட, அது சில நொடிகளில் வைரலானது. தனஸ்ரீயின் படத்திற்கு கீழே, சஹல்  ‘என் தாஜ்மஹால்’ என்று கமெண்ட் செய்துள்ளார். இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு சஹல் இங்கிலாந்து கவுண்டி அணியான கென்ட்டில் இணைந்தார்.

இந்தியாவுக்காக சைனாமேன் பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் பிரகாசித்ததால், டீம் இந்தியாவில் சஹாலின் வாய்ப்பு குறைந்தது. ஆசியக் கோப்பை மற்றும் வரவிருக்கும் ஒருநாள் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் சாஹல் நீக்கப்பட்டார். சாஹலால் இன்னும் மேஜிக் வித்தைகளை செய்ய முடியும். சாஹல் ஒரு ஜாம்பவான் என்றும் எப்போதும் பெருமைப்படுபவர் என்றும் தனஸ்ரீ இன்ஸ்டாகிராமில் பதிலளித்திருந்தார்.

அர்ஷ்தீப் சிங்கிற்கு பிறகு கென்ட் அணிக்காக விளையாடும் 2வது இந்திய வீரர் யுஸ்வேந்திர சாஹல் ஆவார். இந்தியாவுக்காக இதுவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடாதசாஹல், ரஞ்சி டிராபியில் ஹரியானாவின் நட்சத்திர வீரராக உள்ளார்.

https://twitter.com/Weekend__vibes/status/1702771270528672062

https://twitter.com/Weekend__vibes/status/1702771337172050375