மதிமுகவின் துணைப் பொதுச்செயலாளரும், அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோவின் நம்பிக்கைக்குரிய வலதுகரமுமான ஆடுதுறை முருகன், திடீரென அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார். மதிமுகவின் மாநில அளவிலான மிக முக்கிய நிர்வாகியான இவரது இந்தத் திடீர் விலகல், தேர்தல் நேரத்தில் வைகோ தரப்பிற்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

​மொடக்குறிச்சி தொகுதியின் வேட்பாளராக ஆடுதுறை முருகன் அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவருக்கு அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டதே இந்த அதிரடி முடிவுக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. நீண்ட காலமாக மதிமுகவின் தூணாகச் செயல்பட்ட ஒரு மூத்த நிர்வாகி கடைசி நேரத்தில் அதிமுக பக்கம் சாய்ந்தது, தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் மதிமுகவுக்குப் பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.