மகாராஷ்டிராவில் அசுர வேகத்தில் வந்த பைக்குகள் மோதி இரு சிறுவர்கள் படுகாயமடைந்த சம்பவங்களின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி சமூக வலைதளங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
ஒரு மாவட்டத்தில் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த ஒரு குழந்தை மீது, அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் அந்தக் குழந்தை ரத்த வெள்ளத்தில் சரிந்துள்ளது; விபத்தை ஏற்படுத்திய பைக்கர் உடனே திரும்பி வந்து, அக்கம் பக்கத்தினருடன் சேர்ந்து குழந்தையை மீட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்துள்ளார்.
இதே போல் மற்றொரு மாவட்டத்தில் ஸ்கூல் பஸ்ஸில் இருந்து இறங்கி சாலையைக் கடக்க முயன்ற அபித்ஞா மடிவாலே என்ற 9 வயது சிறுமி மீதும் பைக் மோதியதில் அவர் படுகாயமடைந்துள்ளார்.
🚨Shocking Incident in #Akola, #Maharashtra: Bike Rider Runs Over ChildIn a tragic and distressing road accident reported from Akola district in Maharashtra, a bike rider allegedly ran over a child, sparking outrage and concerns over road safety in the region. According to… pic.twitter.com/QmQjZDyQ3f
— Siraj Noorani (@sirajnoorani) June 30, 2026
“>
இச்சம்பவங்கள் குறித்து மாவட்ட போக்குவரத்துப் பிரிவு போலீஸ் அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தி வரும் நிலையில், குடியிருப்புப் பகுதிகளில் அதிவேகமாக வாகனங்களை ஓட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெட்டிசன்கள் தங்களது கவலைகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
