பெங்களூருவில் கன்னடத் தொலைக்காட்சி நடிகை திவ்யா சுரேஷ், தனது உறவினருடன் காரை நோக்கிச் சென்றபோது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தன்னைத் பின்தொடர்ந்து தவறாக நடந்துகொண்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
நள்ளிரவு சுமார் 11:30 மணியளவில் நிகழ்ந்த இந்தச் சம்பவத்தில், காரினுள் ஏறி கதவைப் பூட்டிய பிறகும் அந்த நபர் அங்கேயே நின்றிருந்ததாகத் திவ்யா தெரிவித்துள்ளார்.
இது குறித்து பெங்களூரு காவல்துறையை டேக் செய்து சமூக வலைதளங்களில் அவர் பதிவிட்டுள்ள நிலையில், இந்தச் சம்பவம் பெங்களூருவில் பெண்களின் பாதுகாப்பு குறித்த அச்சத்தையும், விவாதத்தையும் மீண்டும் ஏற்படுத்தியுள்ளது. இதுவரை காவல்துறையிடம் இருந்து அதிகாரப்பூர்வமான பதில் ஏதும் வரவில்லை.
‘திரிபுர சுந்தரி’ தொடர் மற்றும் ‘பிக் பாஸ்’ கன்னட சீசன் 8 மூலம் பிரபலமான திவ்யா சுரேஷ், இதற்கு முன்பும் அக்டோபர் 2025-ல் நடந்த ஒரு ஹிட் அண்ட் ரன் வழக்கில் சிக்கித் தலைப்புச் செய்திகளில் இடம் பெற்றிருந்தார்.
அந்தச் சம்பவத்தில் தான் காரை ஓட்டியதை ஒப்புக்கொண்ட திவ்யா, விமானத்தைப் பிடிக்க அவசரமாக இருந்ததால் விபத்து நடந்த இடத்திலிருந்து சென்றதாகக் கூறியிருந்தார்.
Bigg Boss fame Divya Suresh shares disturbing harassment incident, tags Bengaluru Police for action
A frightening late-night incident involving Bigg Boss fame actor Divya Suresh has drawn attention after she shared her experience of alleged harassment by an unidentified man on… pic.twitter.com/6s8KkquQiN
— Karnataka Portfolio (@karnatakaportf) June 30, 2026
“>
தற்போது மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ள திவ்யாவின் இந்தத் புகாரைத் தொடர்ந்து, பெங்களூருவில் இரவு நேரங்களில் பெண்களுக்கான பாதுகாப்பு வசதிகள், காவல்துறை ரோந்து மற்றும் கண்காணிப்பை பலப்படுத்த வேண்டும் எனப் பலரும் சமூக வலைதளங்களில் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
