தமிழக தேர்தல் களம் அனல் பறந்து வரும் நிலையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் இடையே கடுமையான வார்த்தை போர் வெடித்துள்ளது.
“காரைக்குடியில் சீமானுக்கு வீடும் கிடையாது, ஓட்டும் கிடையாது; அவருக்கும் காரைக்குடிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என்று கார்த்தி சிதம்பரம் விமர்சித்திருந்தார்.
இதற்கு தனது பாணியில் பதிலடி கொடுத்துள்ள சீமான், “ராகுல் காந்தி கேரளாவின் வயநாட்டில் போட்டியிட்டாரே, அவருக்கு அங்கே ஓட்டும், வீடும் இருந்ததா?” என்று அதிரடியாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஓட்டும், வீடும் இருப்பவர்கள் தான் அந்தந்த தொகுதியில் போட்டியிட வேண்டும் என்றால், நீங்கள் பேசும் தேசிய ஒருமைப்பாட்டின் நிலை என்ன? என்று சாடிய அவர், “பயம்.. பயம்.. அந்த நடுக்கம் உங்களிடம் இருக்கட்டும்” என்று கார்த்தி சிதம்பரத்தை வம்புக்கு இழுத்துள்ளார்.
கார்த்தி சிதம்பரத்தின் விமர்சனத்திற்கு ராகுல் காந்தியையே உதாரணமாகக் காட்டி சீமான் கொடுத்துள்ள இந்த பதிலடி தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
