உத்தர பிரதேச மாநிலம் கோண்டா பகுதியில், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம் ஷீலா தேவி என்பவர் தனது காதலனாலேயே கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகாரைச் சேர்ந்த அருண் குமார் என்பவருடன் சமூக வலைதளம் மூலம் பழகிய ஷீலா தேவி, கடந்த 4 ஆண்டுகளாக அவருடன் சேர்ந்து ரீல்ஸ் வீடியோக்கள் எடுத்து லட்சக்கணக்கில் சம்பாதித்து வந்துள்ளார்.

இந்நிலையில், ஷீலா தேவி வேறு ஒருவருடன் பழகி வருவதாகச் சந்தேகித்த அருண் குமார், அவரைத் தீர்த்துக்கட்டத் திட்டமிட்டுள்ளார். ரீல்ஸ் எடுக்கலாம் என்று ஆசை காட்டி காதலியைத் தனியாக ஒரு கரும்புக் காட்டுக்கு அழைத்துச் சென்ற அருண், வித்தியாசமான போஸ் கொடுக்குமாறு கூறி ஷீலாவின் கைகளை கயிறால் கட்டியுள்ளார்.

அதனை உண்மை என்று நம்பிய ஷீலா தேவி போஸ் கொடுக்க, எதிர்பாராத நேரத்தில் கத்தியால் அவரது கழுத்தை அறுத்து தலையைத் துண்டித்துக் கொன்றுள்ளார்.

பணம் கொடுக்கல் வாங்கல் தகராறு மற்றும் சந்தேகத்தால் இந்த கொடூரக் கொலை நடந்திருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

தற்போது அருண் குமாரைக் கைது செய்துள்ள போலீசார், இக்கொலையில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.