பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வுக்கு எதிராக மக்கள் கடந்த சில நாட்களாகப் போராடி வருகின்றனர்.

ராவ்லகோட் பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு பாகிஸ்தான் அரசின் கட்டுப்பாட்டிற்கு எதிராகத் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர். மின்சாரம், உணவுப் பொருட்கள் தட்டுப்பாடு மற்றும் மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள அதிகப்படியான வரிகள் ஆகியவை இந்தப் போராட்டத்திற்கு முக்கியக் காரணங்களாக உள்ளன.

இப்பகுதியின் நீர் ஆதாரங்களை பாகிஸ்தான் அரசு பயன்படுத்திவிட்டு, தங்களுக்குச் சரியான அடிப்படை வசதிகளைச் செய்து தருவதில்லை என்று மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்த போராட்டத்தை ஒடுக்க ஜம்மு காஷ்மீர் அவாமி ஆக்‌ஷன் கமிட்டி மீது பாகிஸ்தான் அரசு தடை விதித்ததோடு, போராட்டக்காரர்கள் மற்றும் தலைவர்கள் மீது பயங்கரவாத தடுப்புச் சட்டங்களின் கீழ் வழக்குகளையும் பதிவு செய்துள்ளது.

“>

 

பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சரின் சர்ச்சைக்குரிய கருத்துக்களும் நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளன. தகவல் பரிமாற்றத்தைத் தடுக்க இணையச் சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ள நிலையில், இது வெறும் பொருளாதாரப் போராட்டமாகத் தொடங்கி, தற்போது தங்களின் அரசியல் அடையாளம் மற்றும் சுயமரியாதைக்கானப் போராட்டமாக மாறியுள்ளதாக உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர்.