ஆந்திரப் பிரதேசத்தின் புகழ்பெற்ற திராட்சாராமம் கோயிலில் சிவலிங்கம் சேதப்படுத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வைகுண்ட ஏகாதசி அன்று அதிகாலை நேரத்தில், சப்த கோதாவரி கால்வாய் கரையில் அமைந்துள்ள பழமை வாய்ந்த சிவலிங்கத்தை மர்ம நபர் ஒருவர் சிதைத்துள்ளார்.

இந்தச் செயல் பக்தர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதோடு, அப்பகுதியில் பதற்றமான சூழலையும் உருவாக்கியது. இதனையடுத்து, அங்குள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்த காவல்துறையினர், குற்றவாளியைக் கண்டறியும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

“>

மேலும் கண்காணிப்பு கேமரா பதிவுகளின் அடிப்படையில், இச்சம்பவத்தில் தொடர்புடைய தோட்டப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த நீலம் சீனிவாஸ் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பூசாரி ஒருவருடன் ஏற்பட்ட தனிப்பட்ட தகராறு காரணமாகவே அவர் இக்கோபத்தில் இச்செயலைச் செய்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதற்கிடையில், பக்தர்களின் உணர்வுகளை மதித்து, சேதமடைந்த இடத்திற்குப் பதிலாக புதிய சிவலிங்கம் முறைப்படி பிரதிஷ்டை செய்யப்பட்டு நிலைமை சீரானது. விரைவான நடவடிக்கை மூலம் மத மோதல்கள் ஏற்படாமல் தடுத்த காவல்துறையினர், இது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.