மேற்கு வங்க மாநிலம் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் பெண் ஒருவர் கொடூரமாகத் தாக்கப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தைக் குறிப்பிட்டு அம்மாநில எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி, மம்தா பானர்ஜி தலைமையிலான அரசை கடுமையாகச் சாடியுள்ளார். முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் ஆட்சியில் பெண்களுக்கு எவ்வித பாதுகாப்பும் இல்லை என்றும், சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துவிட்டதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்நிலையில் ஒரு பெண்ணே முதலமைச்சராக இருந்தும், மாநிலத்தில் பெண்களுக்கு எதிராகத் தொடரும் இத்தகைய வன்முறைகள் கண்டிக்கத்தக்கது என அவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக மாநில அரசு உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.

“>

இந்த திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியின் கீழ் மேற்கு வங்கம் வன்முறை பூமியாக மாறி வருவதாகக் குறிப்பிட்ட சுவேந்து அதிகாரி, சாமானிய மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தற்போது அம்மாநில அரசியலில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், சமூக வலைதளங்களிலும் அரசின் செயல்பாட்டிற்கு எதிராகப் பலரும் தங்கள் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.