உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த நபர், காவல்துறையினரிடம் இருந்து தப்பிக்க மேற்கொண்ட வினோத முயற்சி தோல்வியில் முடிந்தது. கைதாவதில் இருந்து தப்பிப்பதற்காக அந்த நபர் முகத்தில் லிப்ஸ்டிக் பூசி, புர்கா அணிந்து பெண் வேடமிட்டு ஊரை விட்டு வெளியேற முயன்றுள்ளார்.
எனினும், அவரது நடத்தை மற்றும் உருவத்தில் சந்தேகம் கொண்ட உள்ளூர் மக்கள் அவரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது, அவர் பெண் வேடமிட்டிருந்த குற்றவாளி என்பது அம்பலமானது. இதனைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் அந்த நபரை பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்திய வழக்கில் தலைமறைவாக இருந்தவர் என்பது உறுதி செய்யப்பட்டது.
Rajendra Sisodia, 50, who was wanted in a case involving the rape of a minor, was arrested in #UttarPradesh’s #Mathura.
At the time of his arrest, he was found wearing a burqa and lipstick in an unsuccessful attempt to evade arrest. pic.twitter.com/x6IgILGr4j
— Hate Detector 🔍 (@HateDetectors) December 31, 2025
“>
இந்நிலையில் பெண் வேடத்தில் தப்பிக்க முயன்ற அந்த நபரை போலீசார் கைது செய்யும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இச்சம்பவம் மதுரா பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், குற்றவாளியை சாமர்த்தியமாக பிடித்த பொதுமக்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
