நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற வேளாங்கண்ணி மாதா பேராலய ஆண்டு திருவிழாவை முன்னிட்டு தாம்பரத்திலிருந்து வருகின்ற ஆகஸ்ட் 28ஆம் தேதி இரவு 9 மணிக்கு தாம்பரம் மற்றும் வேளாங்கண்ணி சிறப்பு விரைவு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இந்த ரயில் கடலூர் மற்றும் சிதம்பரம் ஆகிய நிறுத்தங்களுடன் இயக்கப்பட உள்ளது. அதனைப் போலவே மறு மார்க்கத்தில் ஆகஸ்ட் 29ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு வேளாங்கண்ணியில் இருந்து புறப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பல்லாயிரக்கணக்கான மக்கள் வேளாங்கண்ணி வருகை தர இருப்பதால் நாகப்பட்டினம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
