தமிழகத்தில் முக்கிய பண்டிகை நாட்கள் மற்றும் வார இறுதி நாட்களில் மக்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி முகூர்த்த தினத்தை முன்னிட்டு இன்றும் நாளையும் 1250 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

ஆகஸ்ட் 20 மற்றும் 21 சுபமுகூர்த்த நாட்களை முன்னிட்டு ஆகஸ்ட் 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்தும் கூடுதல் எண்ணிக்கையிலான பயணிகள் தமிழக முழுவதும் பயணம் செய்வார்கள். இதனால் சென்னையில் இருந்து இன்று 500 பேருந்துகளும் நாளை 350 பேருந்துகளும் கோவை, மதுரை, திருச்சி, சேலம் மற்றும் பெங்களூரு போன்ற இடங்களில் இருந்து 400 பேருந்துகள் என மொத்தம் 1250 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.