சென்னை முதல் பெங்களூரு மற்றும் இன்னும் சில இடங்களுக்கு ரயிலில் செல்லும் பயண நேரம் சுமார் 20 நிமிடங்கள் குறைய போகின்றது. அதாவது அரக்கோணம் மற்றும் ஜோலார்பேட்டை இடையே 144 கிலோ மீட்டர் ரயில் பாதையில் இயக்கப்படும் ரயில்களின் வேகம் தற்போது மணிக்கு 110 கிலோமீட்டர் இருந்து மணிக்கு 130 கிலோ மீட்டராக அதிகரிக்கப்பட உள்ளது. இந்த ரயில் பாதையில் தண்டவாளங்கள் சீரமைக்கப்பட்டு சிக்னல்கள் மேம்படுத்தப்பட்டுள்ளதால் தெற்கு ரயில்வே இந்த புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே சென்னை மற்றும் அரக்கோணம் ரயில் பாதை சீரமைக்கப்பட்ட வேகம் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது அரக்கோணத்தில் இருந்து ஜோலார்பேட்டை இடையேயான வழித்தடமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னையிலிருந்து பெங்களூரு செல்லும் ரயில்களின் ஒட்டுமொத்த பயண நேரம் 4.25 நிமிடங்களாகவும் வந்தே பாரத் ரயிலுக்கு நான்கு மணி நேரமாகவும் குறைக்கப்படுகிறது. இதனால் பெங்களூரு, கோவை, திருவனந்தபுரம், கொச்சி, கோழிக்கோடு, மங்களூர் மற்றும் மும்பை உள்ளிட்ட பல இடங்களுக்கு செல்லும் பயண நேரம் குறையும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.