இந்தியாவில் தற்போது மத்திய மற்றும் மாநில அரசு துறைகளில் காலியாக உள்ள அனைத்து பணியிடங்களும் ரோஸ்கர் மேளா என்ற திட்டத்தின் மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பிரதமர் மோடி கான்ஃபரன்ஸ் மூலமாக கிட்டத்தட்ட 51 ஆயிரம் பேருக்கு இந்த திட்டத்தின் கீழ் பணிநீயமான ஆணைகளை வழங்கிய நிலையில் இதனை தொடர்ந்து பேசிய பிரதமர், அடுத்த பத்து ஆண்டுகளில் இந்தியா முதல் மூன்று பொருளாதாரம் நாடுகளில் ஒன்றாக இருக்கும்.

இந்தியாவில் தற்போது மருந்து தயாரிக்கும் முறை மற்றும் ஆட்டோமொபைல் துறை நல்ல வளர்ச்சி பெற்று வரும் நிலையில் 2030 ஆம் ஆண்டுக்குள் 13 முதல் 14 கோடி புதிய வேலை வாய்ப்புகள் இந்தியாவில் உருவாக்கப்படும். இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு சுற்றுலாத்துறை 20 லட்சம் கோடிக்கு மேல் பங்களிக்கும் என்றும் இந்தியாவில் உள்ளூர் மொழிகளிலேயே தேர்வு நடத்தப்பட இருப்பதால் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.